ரிபு கீதை அத்வைத கருத்துக்களை கொண்ட பாடல் தொகுப்பாகும். சிவரகசியத்தில் ஆறாவது பகுதியாக ரிபு கீதை அறியப்படுகிறது. இதன் தமிழ் வடிவம் ஒரு நூலாக ரமணாச்சிரமத்தினரால் வெளியிடப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் நம்மிடையே வாழ்ந்த ஜீவன் முத்தரான திருவண்ணாமலை இரமண...